என் மலர்tooltip icon

    கிசுகிசு

    வில்லன் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க மறுத்துள்ளாராம். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
    வில்லனாக நடித்த வந்த செல்லம் நடிகருக்கு வரவர வில்லன் வேடத்தில் நடித்து போரடித்துவிட்டதாம். அதனால், இனிமேலான படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம். சமீபத்தில்கூட அவரை ஒரு படத்தில் வில்லனாக நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யச் சென்றிருந்தாராம்.

    ஆனால், வில்லனாக நடித்து போரடித்துவிட்டது. வேண்டுமென்றால், ஏதாவது குணச்சித்திர வேடமென்றால் சொல்லுங்கள் பார்ப்போம் என்று அவரை திருப்பி அனுப்பிவிட்டாராம். தமிழ், தெலுங்கில் முன்னணி வில்லனாக வலம்வந்து கொண்டிருந்த செல்லம் நடிகரின் இந்த திடீர் முடிவு பிற வில்லன் நடிகர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாம்.  
    நடிகர் ஒருவர் பஞ்ச் டயலாக்குகள் பேச ரொம்பவே பயப்படுகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
    உச்ச நடிகருக்கு பிறகு தனது படங்களில் அதிக பஞ்ச் டயலாக்குகளை பயன்படுத்தியவர் தளபதி நடிகர்தான். ஆரம்பத்தில் கதைக்காக எழுதப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் அதன்பின்னர், அரசியலை அட்டாக் பண்ணுகிற வகையில் அமைந்தது, அவருக்கு தியேட்டரில் விசிலை அள்ளிக் கொடுத்தாலும், அரசியல் வட்டாரங்களில் தளபதி நடிகருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், அவரது படங்கள் வெளிவருவதில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டன.

    இந்நிலையில், படிப்படியாக தனது படங்களில் பஞ்ச் டயலாக்குகளை குறைத்துக் கொண்டு வருகிறாராம் தளபதி நடிகர். படங்களின் கதைக்கு சம்பந்தப்பட்ட பஞ்ச் வசனங்களை மட்டுமே அவர் பேசி வருகிறாராம். தற்போது தளபதி நடிகர் நடித்து வரும் புதிய படத்தில்கூட இயக்குனர் நடிகருடைய ரசிகர்களை கவரும் வகையில் நிறைய பஞ்ச் டயலாக்குகளை வைத்திருந்தாராம்.

    நான் சாதாரணமாக பேசினால்கூட அதை அரசியலாக்கிவிடுவார்கள் என அந்த பஞ்ச் டயலாக்குகளை எல்லாம் இயக்குனரிடம் சொல்லி தூக்கிவிட்டாராம் நடிகர். இதனால், தற்போதைய படம் எந்தவித பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல் வெளிவருகிறதாம். 
    இயக்குனர்கள் எல்லாம் நடிகராகும் வரிசையில், தற்போது மற்றொரு இயக்குனரும் இணைந்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    மிகப்பெரிய இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாக மாறியது அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல.. மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களுடைய அடுத்தடுத்த கதைகளில் நடிக்க மார்க்கெட்டில் உள்ள ஹீரோக்கள் நடிக்க மறுத்ததின் விளைவே, அவர்கள் ஹீரோவானதற்கு காரணம் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    அப்படித்தான் இப்போது ஒரு மற்றொரு தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரும் நடிகராக மாறவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, நயன நடிகையின் காதலர்தான். இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்க நயன நடிகை முன்வந்துள்ள நிலையில், இப்படத்தில் எப்படியாவது பெரிய ஹீரோக்களை நடிக்க வைத்து தனது காதலரை ஏற்றிவிட்டு விடலாம் என்ற யோசனையில் இருந்த நயன நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

    ஏனென்றால், சிவமான அந்த இயக்குனரின் கதையில் நடிக்க எந்த முன்னணி நடிகரும் முன்வரவில்லையாம். விளைவு, தற்போது அந்த இயக்குனரே கதையின் நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். நயன நடிகைக்கும் அதுவே சரியென்று படுகிறதாம். ஹீரோயினாக நயன நடிகையே நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவருகிறது.
    ‘வட போச்சே’ என்கிற ரேஞ்சில் தற்போது மிகப்பெரிய தயாரிப்பாளர் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
    உச்ச நடிகர் அடுத்ததாக தனது மருமகன் தயாரிப்பில் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், உச்ச நடிகரை வைத்து பெரிய ஹிட் படத்தை கொடுத்த இரண்டெழுத்து தயாரிப்பாளர் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். உச்ச நடிகர் தற்போது கமிட்டாகியிருக்கும் புதிய படம் அவருக்கு வரவேண்டியதாம். ஆனால், தற்போது கைநழுவிப் போய்விட்டதே என்ற கவலையில் அந்த தயாரிப்பாளர் இருப்பதாக கூறப்படுகிறது.

    இரண்டெழுத்து தயாரிப்பாளர் உச்ச நடிகரை வைத்து தயாரித்த படம் பெரிய வெற்றியடைந்து தயாரிப்பாளருக்கு மிகுந்த லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. உச்ச நடிகர் தனது சம்பளம், கமிஷன் என எல்லாம் வாங்கிய பிறகும், படத்தின் வசூலை பார்த்து, தயாரிப்பாளரிடம் மேலும் ரூ.100 கோடியை கூடுதலாக கேட்டு வாங்கிக் கொண்டாராம்.

    அப்படி வாங்கும்போது, அந்த தயாரிப்பாளருக்கு அடுத்ததாக ஒரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதியும் கொடுத்தாராம். ஆனால், உச்ச நடிகரோ வாக்குறுதியை விட்டுவிட்டு தனது மருமகனுக்காக படம் பண்ண கிளம்பிவிட்டார். இனிமேல், கொடுத்த பணத்தை எப்படி திருப்பி கேட்பது. அவரிடம் போய் இனிமேல் எப்படி வாய்ப்பு கேட்பது என்பது தெரியாமல் விழிக்கிறாராம் தயாரிப்பாளர். 
    கொலவெறி நடிகரை தலைவரின் மனைவி சமாதானப்படுத்திய சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே படிப்போம்...
    கொலவெறி நடிகரின் குடும்பத்தில் பால் நடிகையால் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யமான தனது மனைவியின் பேச்சையும் மீறி தன்னுடைய படத்தில் பால் நடிகையை கொலவெறி நடிகர் ஒப்பந்தம் செய்துள்ளது ஐஸ்வர்யமானவரை மிகவும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம். ஆகையால், இந்த பிரச்சினையை தனது அப்பாவான உச்ச நடிகரிடம் கொண்டு சென்றாராம். ஐஸ்வர்யமானவர்.

    இதனால், தனது மனைவி மீது கொலவெறி நடிகர் கோபத்தில் இருந்தாராம். இந்நிலையில், ஐஸ்வர்யமானவருக்கு மிகப்பெரிய பதவி ஒன்று கைகூடி வந்தது. அந்த பதவியேற்பு விழாவில் தனது கணவரையும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்க ஐஸ்வர்யமானவர் எண்ணியிருந்தாராம். ஆனால், கணவர் தன்மேல் உள்ள கோபத்தால் வரமாட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், இந்த பிரச்சினையில் ஐஸ்வர்யமானவரின் தாயார் உள்ளே நுழைந்து, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த நடிகரை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து வந்தாராம்.

    இருப்பினும், கொல வெறி நடிகருக்கு தன் மனைவி மீது இருந்த கோபம் தணியவில்லையாம். இதனால், மேடையில் தனது மாமியாரிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாராம். மனைவி பக்கம் பெயருக்குகூட திரும்பவில்லையாம். இருப்பினும், தனது பதவியேற்பு விழாவில் தனது கணவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதே போதும் என்ற மனத்திருப்தியில் ஐஸ்வர்யமானவர் வீடு திரும்பினாராம்.

    அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு நடிகை ஒருவர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    தமிழ் சினிமாவின் சாபமோ என்னவோ, பிரபலமாகும் நடிகைகள் எல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு ஆளாகிவிடுகிறார்கள். அப்படித்தான், இங்கிலாந்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ள துரையம்மா நடிகைக்கு வரிசையாக அமைந்த படங்கள் அனைத்துமே பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் பெரிய இயக்குனரின் படங்கள்.

    அதனால், மொத்தமாக நடித்த 3 படங்களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் எப்போதும் கவர்ச்சி என்பது ஒரு ஊறுகாய் மாதிரிதான். ஆனால், மற்ற படவுலகில் கவர்ச்சிதான் மெயின் விஷயம். இதனால், தமிழ் சினிமாவில் பிரபலமாகும் கதாநாயகிகள் அடுத்தகட்டமாக பாலிவுட்டை நோக்கித்தான் படையெடுக்கின்றனர்.

    அப்படித்தான், இந்த துரையம்மா நடிகையும் தற்போது பாலிவுட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார். அங்கு கவர்ச்சியில் தாராளம் காட்டவேண்டும் என்பதால் துரையம்மா தற்போது அரை நிர்வாண கோலத்தில் நடிக்கும் அளவுக்கு களமிறங்கியுள்ளார். அப்படிப்பட்ட புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டு, பெரிய சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படங்களும் வைரலாக பரவி வருகிறது. 
    நயன நடிகையை தொடர்ந்து படங்களின் புரோமோஷனுக்கு வர மற்றொரு நடிகை ஒருவரும் முரண்டு பிடிக்கிறாராம். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்...
    நயன நடிகை தான் நடிக்கும் எந்த படத்தின் புரோமோஷனுக்கு வருவதில்லை என்று முரண்டு பிடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது அவரது வரிசையில் இன்னொரு நடிகையும் இனிமேல் படத்தில் நடிப்பதோடு சரி, புரோமோஷன்களில் கலந்துகொள்ளவது கிடையாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

    அவர் வேறு யாருமல்ல, பிரம்மாண்ட படத்தில் நடித்த அவந்திகா நடிகைதான். இவர் ஆரம்பத்தில் இவர் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் எல்லாம் கலந்துகொண்டார். ஆனால், தற்போது இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் லிஸ்டில் இருப்பதாலும், அவரைத் தேடி நிறைய படங்கள் வரத்தொடங்கியதாலும் இனிமேல் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம்.

    அதையும் மீறி மிகப்பெரிய நடிகர்களுடைய படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் என்றால், அதில் கலந்துகொள்வதற்காக மிகப்பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் அவர்மீது மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்களாம்.
    தன்னுடைய காதல் இயக்குனருக்கு நடிகை ஒருவர் பெரிய நடிகரிடம் கால்ஷீட் கேட்டு நிற்கிறார். அவர் யார்? என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்..
    நயன நடிகை இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு தற்போது சிவமான இயக்குனருடன் காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துகொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு பேர் தரப்பிலிருந்தும் எந்த எதிர்ப்பும் வரவில்லை. மாறாக, இருவரும் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டு இந்த செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாகவே நடந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், தன்னுடைய காதலரான இயக்குனரின் படத்தில் ஏற்கெனவே நடித்து கொடுத்து, அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த நடிகை, தற்போது, தன்னுடைய காதலர் இயக்கும் அடுத்த படத்தை அவரே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம். தன்னுடைய காதலர் பெரிய நடிகரை வைத்து இயக்கினால், அவருடைய புகழ் பெரிய உச்சிக்கு சென்றுவிடும். அதன்பிறகு, தனது காதல் கதையை வெளிப்படுத்தி அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம் நடிகை.

    இதற்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதில், முக்கியமாக ‘தல’ நடிகரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அவரை நடிக்க வைத்துவிட்டால் காதல் இயக்குனரை தன்னுடைய எண்ணம் நிறைவேறிவிடும் என நினைக்கும் நடிகையோ, இந்த படத்தில் நடிக்க ‘தல’ நடிகர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயார் என்று உறுதி கொடுத்துள்ளாராம்.

    நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளம் என்றாலும் கொடுக்க தயார் என்று கூறியுள்ளாராம். நடிகையின் விருப்பத்தை ‘தல’ நடிகர் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    தில்லான நடிகரை பிரமுகர் ஒருவர் வசை பாடியுள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்..
    தில்லான நடிகர் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய கலாச்சார நிகழ்வில் கலந்துகொண்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் தில்லான நடிகர் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெரும்பாலான இந்தியர்கள் தில்லான நடிகரிடம் செல்பி எடுக்க முண்டியடித்தார்களாம். ஆனால், தில்லான நடிகரோ அவர்களின் விருப்பத்தை ஏற்க மறுத்துவிட்டாராம்.

    இதனால், கடுப்பான தமிழ் சங்கத்தை சேர்ந்த ஒருவர் தனது முகநூலில் தில்லான நடிகரை பற்றி கடுமையான வார்த்தைகளால் பதிவு செய்துவிட்டார். ஆனால், தில்லான நடிகரை பற்றி தெரிந்த பலரும் அவரை பதிலுக்கு வசை பாடினர். இதனால், நொந்துபோன அவர் தனது பதிவை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இந்த சம்பவம் குறித்த தில்லான நடிகரும் எந்த வார்த்தையும் கூறவில்லை.

    கண்மணி நடிகையை பிரபல நடிகை ஒருவர் பெரியளவும் கடுப்பேற்றியிருக்கிறார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
    சாமி நடிகர் இருவேடத்தில் நடித்துள்ள படத்தில் நயனமான நடிகையும், கண்மணி நடிகையும் நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இப்படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடந்தபோது இரண்டு பேரும் ஆஜராகவே இல்லை.

    நயன நடிகை எப்போதும் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்ற பாலிசியை வைத்திருக்கிறார். ஆனால், கண்மணி நடிகை ஏன் கலந்துகொள்ள மறுக்கிறார் என்பது தெரியாமலே இருந்துவந்தது.

    இதுகுறித்து விசாரிக்கையில், இப்படத்தின் விளம்பரங்களை எல்லாம் நயன நடிகையை பிரதானமாக வைத்துத்தான் பிரபலப்படுத்தி வருகிறார்களாம். கண்மணி நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லையாம்.

    படத்தின் புரோமோஷன்களுக்கே வராத நடிகையை மட்டுமே வைத்து அவர்கள் விளம்பரப்படுத்தும்போது நான் மட்டும ஏன் புரோமேஷன்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே கண்மணி நடிகை படத்தின் எந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லையாம்.

    நயன நடிகையை வைத்து படக்குழுவினர் விளம்பரப்படுத்தினாலும், படம் வெளிவந்த பிறகு என்னுடைய நடிப்புதான் பெரிதும் பேசப்படும் என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கண்மணி நடிகை பேசிக் கொள்கிறாராம். 
    பாலிவுட் நடிகைகளை கலங்கடிக்க வைக்கும் அளவுக்கு துரையம்மாவின் செயல்பாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்ன விஷயம்? என்பதை கீழே பார்ப்போம்...
    துரையம்மா நடிகையின் பூர்வீகம் ஹாலிவுட் என்பதால் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் கவர்ச்சியில் ரொம்பவும் தாராளம் காட்டி வருகிறார். அவருடைய தாராளம் கோலிவுட்டுக்கு கைகொடுக்கிறதோ இல்லையோ, பாலிவுட்டில் பெரிய அளவில் கைகொடுக்கிறது. பாலிவுட்டில் இவர் அறிமுகமான படம் பெரிதளவில் ஓடவில்லையென்றாலும், அடுத்து அவர் நடிப்பில் வெளியாகவுள்ள படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்.

    அதோடு, தமிழிலும் உச்ச நடிகரின் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என்பதற்காக தற்போதே மும்பையில் ஒரு வீடு வாங்கி குடியேறிவிட்டாராம். மேலும், அங்குள்ள முன்னணி நடிகர்களிடம் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.

    கவர்ச்சி விஷயத்தில் நடிகை மிகவும் தாராளம் காட்டக்கூடியவர் என்பதால், பாலிவுட் படங்களில் அவர் தீவிரம் காட்டுவதை அறிந்த பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பலர் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
    பால் நடிகை ஒருவர் தனது மாமனாருக்கு பயப்படுகிறாராம். அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்...
    பால் நடிகை காதலித்து கரம்பிடித்த கணவரை விவாகரத்து செய்வதற்காக கோர்ட் படியேறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பிரிவது தற்போது உறுதியாகிவிட்டாலும், இன்னமும் தனது மாமனாரை கண்டு பயப்படுகிறாராம். காரணம் என்னவென்று விசாரிக்கையில், பால் நடிகையின் மாமானார் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

    பால் நடிகை தற்போது அவரது மகனை விவகாரத்து செய்ய முடிவெடுத்துள்ளதால், அந்த தயாரிப்பாளர் மேல் உள்ள மரியாதையில் பல தயாரிப்பாளர்கள் பால் நடிகையை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு தயங்குகிறார்களாம். ஏற்கெனவே கமிட்டாகியிருந்த படங்களில் இருந்தும் பால் நடிகையை சிலர் தூக்கிவிட்டார்களாம். இதனால், பால் நடிகையின் மார்க்கெட் கிட்டத்தட்ட சரிந்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

    திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதற்காகவே அவரை விவாகரத்து செய்ய பால் நடிகை முடிவு செய்திருந்தார். ஆனால், மாமனாரால் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு வழியே இல்லாமல் போய்விட்டதால் என்ன செய்வது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறாராம். 
    ×