என் மலர்tooltip icon

    கிசுகிசு

    வாரிசு நடிகை ஒருவர் தனது தங்கையை தூக்கிவிடுவதற்காக செய்த முயற்சியை தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே படியுங்கள்...
    வீரமான நடிகருடன் வாரிசு நடிகையின் தங்கை நடிக்கவிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். வாரிசு நடிகையின் தங்கை எப்படி இந்த படத்தில் கமிட்டானார் என்பதற்கு புதிய கதை ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது, தனது தங்கையை அவருடன் நடிக்க வைத்ததற்கு காரணம் வாரிசு நடிகைதான் என்ற ஒரு புது கதை கோலிவுட் வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    அதாவது, வாரிசு நடிகை ஏற்கெனவே வீரமான நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து விட்டார். அந்த படத்திற்கு பிறகு வீரமான நடிகருடன் நட்பு அதிகமாகவே, உரிமையுடன் அவருக்கு போன் போட்டு தனது தங்கையை உங்களது அடுத்த படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வையுங்கள் என்று கோரிக்கை வைத்தாராம் வாரிசு நடிகை.

    அந்த நட்பு அடிப்படையிலேயே வாரிசு நடிகையின் தங்கையை வீரமான நடிகரின் அடுத்த படத்தில் புக் செய்திருப்பதாக கூறப்படுகிறது. வாரிசு நடிகையின் தங்கை ஏற்கெனவே பாலிவுட்டில் பெரிய நடிகருடன் சேர்ந்து நடித்திருந்தாலும், தமிழில் பெரியதளவில் அவரது முகம் எடுபடவில்லை. தமிழில் தன்னைப்போலவே தனது தங்கையையும் பிரபலப்படுத்திவிடத்தான் வாரிசு நடிகை இந்த முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.
    படம் ஒன்றை வெளியிட நடிகர் ஒருவர் முட்டுக்கட்டையாக நிற்கிறாராம். அது யார்? என்பதை கீழே பார்ப்போம்...
    சாமி நடிகர் தற்போது நடித்துள்ள இரட்டை வேட படத்தின் வெளியீடை ஆனைமுகத்தானுக்குரிய விழாவில் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், அந்த தேதியில் வெளியிட வேண்டாம் என நடிகர் முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம். ஏனென்றால், அன்றைய தேதியில்தான் சாமி நடிகரின் முந்தைய படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தாம்.

    ஆகையால், இந்த படத்தை அந்த தேதியில் வெளியிட வேண்டாம் என்று நடிகர் ஒரே முடிவாய் இருக்கிறாராம். தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ள தேதி விடுமுறை தினம் என்பதால், அந்த தேதியில் வெளியிட்டால் ஓரளவு வசூலை அள்ளிவிடலாம் என்று தயாரிப்பாளர் நினைத்துக் கொண்டிருக்கையில், நடிகரின் இந்த விருப்பத்தை ஏற்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். 
    வாரிசு நடிகை ஒருவர் தொழிலதிபரை மணக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்..
    ஸ்ருதிமயமான வாரிசு நடிகைக்கு அடுத்த வருடம் திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். தற்போது கோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக விளங்கிவரும் நடிகைக்கு வயது ஏறிக்கொண்டே செல்வதால்தான் உடனடியாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதுவரை எந்த காதல் கிசுகிசுக்களிலும் சிக்காத நடிகைக்கு ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம். கூடிய விரைவில் நடிகையை கட்டிக்கொள்ளப் போகும் மாப்பிள்ளை யார் என்பதை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பால் நடிகையுடன் நடிக்கக்கூடாது என பிரபல நடிகரின் மனைவி ஒருவர் வலியுறுத்தியுள்ளாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
    பால் நடிகை தனது கணவரை விவாகரத்து செய்யப்போகும் விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், பால் நடிகை கணவரை பிரிவதற்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு செய்திகள் வெளிவந்தது. இதில், கொலவெறி நடிகரின் பெயரும் அடிபட்டது.

    இது நடிகரின் மனைவிக்கு பெரிய மனஉளைச்சலை கொடுத்துள்ளது. இதனால், நடிகரின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பால் நடிகையை தற்போது நீக்கக்கோரி கொலவெறி நடிகரின் மனைவி அவரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம். நடிகரும் வேறு வழியில்லாமல் இப்படத்திற்கு தற்போது பால் நடிகைக்கு பதிலாக புது நடிகையை ரகசியமாக தேடி வருகிறாராம்.

    விரைவில் பால் நடிகை கொலவெறி நடிகரின் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தி வெளிவந்தாலும் ஆச்சர்யமில்லை.     

    தமிழ் சினிமாவில் தளபதி நடிகரையும், தல நடிகரையும் நேர்-எதிர் துருவங்களாகத்தான் சித்தரித்து வருகிறார்கள். ஆனால், இங்கே நாம் பார்க்கப்போவதாக தல-தளபதி பிரச்சினையை பற்றி அல்ல. தளபதியின் தலையைப் பற்றி..
    சமீபத்தில் தளபதி நடிகர் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஓய்வு எடுப்பதற்காகத்தான் சென்றிருக்கிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், அவர் வேறு ஒரு விஷயத்துக்காக அமெரிக்கா சென்றது தற்போது தெரியவந்துள்ளது.

    அதாவது, நடிகருக்கு சமீபகாலமாக தலைமுடி அதிகமாக கொட்டிக் கொண்டிருக்கிறதாம். கூடிய விரைவிலேயே அவரது தலைமுடி அனைத்தும் உதிர்ந்து வழுக்கை தலை உருவாக வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் பயமுறுத்தவே, தனது பிறந்தநாள் கொண்டாடத்தைக்கூட தள்ளி வைத்துவிட்டு, உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதற்காகத்தான் அமெரிக்கா சென்றாராம்.

    தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில்கூட விக் வைத்துக்கொண்டுதான் நடித்து வருகிறாராம். கூடிய விரைவில் தன்னுடைய தலைமுடி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் நடிகர் இருந்து வருகிறாராம். 
    நட்புக்காக எந்த கதாபாத்திரலும் நடிகர் ஒருவர் நடிக்க தயாராகியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்....
    சுமார் மூஞ்சி நடிகருக்கு ஒரு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம் என்றால், அது கொலவெறி நடிகர் தயாரித்த ரௌடி படம்தான் என்று சொல்லவேண்டும். இந்த படத்தின்போது ஆரம்பித்த இவர்களது நட்பு, தற்போது ஆழமாக வேரூன்றியுள்ளதாம். இதற்கு ஒரு சம்பவமும் நடந்தேறியுள்ளது.

    கொலவெறி நடிகர் தற்போது நடித்துக் கொண்டிக்கும் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க ஜீவமுள்ள நடிகரை கேட்டுள்ளனர். ஆனால், படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிய வலு இல்லாததால் ஜீவ நடிகர் இதில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, சுமார் மூஞ்சி குமாரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா? என்று கேட்டார்களாம். அதற்கு குமாரு நடிகர் எந்த மறுப்பும் சொல்லாமல், கொலவெறி நடிகரின் நட்புக்காக எந்த கதாபாத்திரத்திலும் நான் நடிக்கத் தயார் என்று தெரிவித்தாராம்.
    கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் அந்த நடிகருடன் மட்டும் நடிக்கமாட்டேன் என்று நடிகை ஒருவர் தடாலடியாக கூறியுள்ளார். இதுகுறித்து கீழே பார்ப்போம்...
    வம்பு நடிகருடன் ஜோடி சேர்ந்த முதல் படத்திலேயே அவர்மீது காதல் வயப்பட்டு, பின்னர் பிரிந்துபோன ஜுலியட் நடிகைக்கு தற்போது மீண்டும் வம்பு நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்ததாம். இதுகுறித்து நடிகையிடம் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் சென்று பேச்சுவார்த்தை வேறு நடத்தியுள்ளனர்.

    ஆனால், நடிகையோ, கோடி சம்பளம் கொடுத்தாலும் வம்பு நடிகருடன் மீண்டும் நடிக்கமாட்டேன் என்று ஒரே விடாபிடியாக படக்குழுவினரை விரட்டி விட்டாராம். வம்பு நடிகர் தன் முன்னாள் காதலியான நயன நடிகையுடன் நடித்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருந்தபடியால், மற்றொரு காதலியான இவருடனும் மீண்டும் ஜோடி போட்டால் தனது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும் என்பதாலேயே நடிகையை அணுகியதாக கூறப்படுகிறது. 
    காமெடி நடிகர் ஒருவர் ஆக்ஷன் ஹீரோவாக மாற ஆசைப்பட்டுள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்...
    காமெடியில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கலக்கிய சந்தன நடிகர், ஹீரோவாக ஆசைப்பட்டு ஒருசில படங்களில் நடித்தார். எந்த படமும் அவரை ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தாவிட்டாலும், கடைசியாக நடித்த பேய் படம் அவரை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதில், ஆக்ஷனிலும் இவர் சிறப்பாக நடித்ததால், அவருக்கு நெருங்கியவர்கள் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சிக்குமாறு நடிகரை உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.

    ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர்கள்தான் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்றும் கூறி நடிகரை கூடக்கொஞ்சம் உசுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால், அடுத்தக்கட்டமாக ஆக்ஷன் ஹீரோவாக மாற, காமெடி நடிகர் முயற்சி செய்து வருகிறாராம். அதன்முதற்கட்டமாக, தற்போது ஜிம்மிற்கு சென்று தனது உடல் எடையை கூட்டி வருகிறாராம்.

    கூடுதல் தகவல் என்னவென்றால், சிக்ஸ் பேக் உடற்கட்டோடு தனது ஆக்ஷன் பயணத்தை தொடங்கலாம் என அவர் முடிவு செய்துள்ளாராம். தற்போது அதற்கான வேலைகளில் நடிகர் தீவிரமாக இறங்கியுள்ளாராம். 
    கோலிவுட் நடிகை ஒருவர் டோலிவுட்டில் புதிய சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    நயன நடிகை அவர் நடிக்கும் படங்களோட படப்பிடிப்புக்கு கலந்துகொள்வதோடு சரி, அந்த படத்தின் எந்தவித புரோமோஷனுக்கும் அவர் செல்வதில்லை என்பது ஊரறிந்த செய்திதான். ஆனால், தற்போது படப்பிடிப்புக்கும் சரியாக செல்வதில்லை என்று புதிய புகார் ஒன்று அவர் மீது எழுந்துள்ளது.

    இது கோலிவுட்டில் அல்ல, டோலிவுட்டில். தெலுங்கு படவுலகிலும் இவருக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், தற்போது அங்கு மிகப்பெரிய நடிகருடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு சரிவர செல்வதில்லை என்று அப்படத்தின் இயக்குனர் நடிகை மீது புகார் எழுப்பியுள்ளார்.

    இதனால், நடிகையை வைத்து அடுத்த படத்தையும் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்த அப்படத்தின் தயாரிப்பாளர் தற்போது பின்வாங்கிவிட்டாராம். ஆனால், நடிகைக்கோ இதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல தனது பாணியை பின்பற்றியே வருகிறாராம். 
    சம்பளமே வாங்காமல் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்...
    திவ்யமான நடிகை சிவமான நடிகருடன் நடித்த ரெண்டு படங்களும் பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டது. இதனால், இவர்கள் இணையும் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற ஒரு செண்டிமென்ட் பேச்சு தற்போது கோலிவுட்டில் பரவலாக பரவி வருகிறது. இதனால், சிவமான நடிகர் தற்போது நடித்து வரும் இரண்டெழுத்து படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க திவ்யமான நடிகையை அழைத்தார்களாம்.

    சிவமான நடிகர் படமென்றதும், இந்த படத்தில் நடிக்க திவ்யமானவர் உடனே ஒப்புக்கொண்டாராம். அந்த படத்தில் தனக்கு சின்ன வேடம்தானே, அப்புறம் எதுக்கு எனக்கு சம்பளம் என்று சொல்லி, தயாரிப்பாளர் தரப்பு கொடுக்க முன்வந்த சம்பளத்தைகூட வாங்க மறுத்துவிட்டாராம். இதனால், படக்குழுவினர் மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து போனார்களாம்.
    நடிகை ஒருவர் தளபதி நடிகர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம். அது யார் என்பதை கீழே பார்ப்போம்...
    தளபதி நடிகர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கீர்த்திமயமான நடிகை ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால், முதலில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க மூணுஷா நடிகைதான் தானாக முன்வந்து நடிக்க ஆசைப்பட்டாராம்.

    இதுகுறித்து, தனது மேனேஜர் மூலமாக தூது அனுப்பினாராம். ஆனால், தளபதியோ மூணுஷா நடிகையை வேண்டாமென்று நிராகரித்துவிட்டாராம். அதன்பிறகே, கீர்த்தியமயமானவர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். இதனால் தன்னை வேண்டாமென்று நிராகரித்த தளபதி மேல் மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம் மூணுஷா நடிகை. 
    இந்தி படவாய்ப்புகளை நடிகை ஒருவர் மிகவும் தவிர்த்து வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்..
    கீர்த்தியான நடிகைக்கு தமிழில் வெகு சீக்கிரமாகவே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதனால், அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக தேடிவர ஆரம்பித்திருக்கிறது. வந்த வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட்டுக் கொள்ளாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

    அதிலும், குறிப்பாக இந்தி பட வாய்ப்புகள் வந்தால் அதற்கு உடனடியாக நோ சொல்கிறாராம். காரணம் என்னவென்று விசாரித்தால், நயன நடிகையைப் போன்றே தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்து அவரைப் போலவே உச்சத்தை தொடப் போகிறாராம்.

    மேலும், இந்தி படங்களை நம்பிப் போன நடிகைகளின் சினிமா வாழ்க்கை அதன்பிறகு என்னவானது என்பது பற்றியும் அவருக்கு நிறைய பேர் யோசனை கூறியிருக்கிறார்கள். அதனாலயே, அவர் இந்தி பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. 
    ×