என் மலர்tooltip icon

    கிசுகிசு

    நடிகை ஒருவர் ஹோட்டலில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளார். அங்கு என்ன நடந்தது? என்பதை அறிய கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் பெரிய நம்பர் நடிகை தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார். இதனால், அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகிறதே தவிர, ஒருபோதும் குறைந்ததில்லை. இதனால், சென்னையிலேயே தனி வீடு ஒன்றை வாங்கி அங்கு தனது காதலருடன் குடியமர்ந்தார்.

    ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த சில மாதங்களாக இந்த நடிகை வீட்டை விட்டு வெளியேறி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தாராம். அங்கிருந்துகொண்டே படப்பிடிப்புக்கு செல்வது, திரும்புவது என்று இருந்த நடிகை தற்போது மனம் மாறி, ஹோட்டலை விட்டு வெளியேறி தனது வீட்டுக்கே திரும்பிவிட்டாராம்.



    அவர் ஏன் ஹோட்டலுக்கு சென்றார்? மறுபடியும் ஏன் ஹோட்டலை விட்டு வெளியே சென்றார்? என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பெரிய கேள்வியே எழுந்துள்ளதாம். அவர் ஹோட்டலில் சென்று தங்கும் அளவுக்கு அவரது வீட்டில் என்ன நடந்தது? மறுபடியும் ஹோட்டலை விட்டு வெளியேறும் அளவுக்கு அவரது அறையில் என்ன நடந்தது? என்பதும் மர்மமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
    தனது அபிமான நடிகரின் படத்திலிருந்து பால் நடிகை விலக காரணம் என்று ஒரு விஷயம் வெளிவந்துள்ளது. அது உண்மைதானா? என்பதை பார்ப்போம்.
    பால் நடிகையின் அபிமான நடிகரான கொலவெறி நடிகர் சென்னையின் முக்கிய பகுதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பால் நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், திடீரென இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இதற்கு கால்ஷீட்தான் பிரச்சினை என்று மழுப்பலாக ஒரு பதிலையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    ஆனால், உண்மையில் கால்ஷீட் பிரச்சினையில்தான் அவர் வெளியே போனாரா? என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது. ஆனால், உண்மையில் அவர் கால்ஷீட் பிரச்சினைக்காக வெளியே செல்லவில்லை. அவரை படக்குழுவினரே படத்தில் இருந்து தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.



    ஏனென்றால், கொலவெறி நடிகர் தனது படங்களில் தொடர்ந்து பால் நடிகை நடிக்கவைப்பதால் இரண்டு பேரையும் இணைத்து நிறைய வதந்திகள் பரவத் தொடங்கியது. இது கொலவெறி நடிகரின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பெரிய தலைவலியை கொடுத்ததாம். இதனால், இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட கொலவெறி நடிகர்தான் பால் நடிகையை அந்த படத்தில் இருந்து நீக்கச் சொன்னதாக கூறப்படுகிறது.

    ஆனால், பால் நடிகை நீக்கப்பட்டார் என்று சொன்னால் அது பெரிய விஷயமாக பேசப்படும் என்று நினைத்த படக்குழு, அவர் விலகிவிட்டதாக அறிவித்ததாம்.
    தனக்கு குத்துச்சண்டை தெரியும் என மச்சான் நடிகை தனது மறுமுகத்தை காட்டியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    மச்சான் நடிகை ஒருகாலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். இவரது கவர்ச்சிக்காகவே இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் இவரை நடிக்க வைக்க போட்டி போட்டனர். ஒருகட்டத்தில் குண்டாகிவிட்ட இவருக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லாமல் போனது. இதன்பிறகு, தனது நிலைமையை புரிந்துகொண்ட நடிகையும், இயற்கை உணவுகள், உடற்பயிற்சி என கடுமையான முயற்சிகள் எல்லாம் செய்து தற்போது ஒல்லி நடிகையாகிவிட்டார்.

    இதைத் தொடர்ந்து அவருக்கும் படவாய்ப்புகள் குவிந்துவருகிறது. இந்நிலையில், இந்த நடிகையின் இன்னொரு முகம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இவர் மிகப்பெரிய குத்துச்சண்டை வீராங்கனையாம். ஆனால், இவர் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று குத்துச்சண்டை கற்றுக் கொள்ளவில்லையாம். தற்காப்புக்காகவே இவர் குத்துச்சண்டை கற்றுக் கொண்டாராம்.



    இதுவரைக்கும் எந்த போட்டியிலும், சினிமாவிலும் தான் குத்துச்சண்டை வீராங்கனை என்பதை காட்டிக்கொள்ளாத மச்சான் நடிகை, இனிமேல் குத்துச்சண்டை வீராங்கனையாக சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இவருடைய இந்த முடிவுக்கு சமீபத்தில் சினிமாவுக்கு வந்த குத்துச்சண்டை நாயகிதான் காரணமாம். அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மிரண்டுபோய்தான் மறைத்து வைக்கப்பட்டிருந்த திறமையை தற்போது வெளிக்கொண்டு வர முடிவுசெய்துள்ளாராம் மச்சான் நடிகை.
    நடிகர் ஒருவர் தனக்கு வந்த பதவிகளால் பயந்துபோய் உள்ளாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    விசாலமான நடிகர் தற்போது சினிமாத்துறையில் உள்ள முக்கிய சங்கங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார். இளம் வயதிலேயே முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கும் நடிகருக்கு ஒருபக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் சிறு பயமும் இருக்கிறதாம்.

    சங்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த நடிகர் சினிமா துறையினருக்கு ஏதாவது நல்லது செய்வார் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விதான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறதாம்.



    இதனால், முக்கிய பொறுப்புகளுக்கு வரும்வரை எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருந்த நடிகருக்கு, இப்போது பயங்கர டென்ஷனோடு இருக்கிறாராம். இதனால், பொதுமேடையில் பேசும்போதுகூட, என்ன பேசுகிறோம்? ஏது பேசுகிறோம்? நாம் பேசுவது சரிதானா? சாத்தியம்தானா? என்பது தெரியாமலேயே உளறி கொட்டுகிறாராம்.

    இதனால், திரைத்துறையினர்கள் மத்தியில் இந்த நடிகரின் மீது மிகப்பெரிய அதிருப்தி வந்துள்ளதாம். பதவிகளை பிடிப்பதற்காக இவர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம்.
    முன்னணி நடிகை ஒருவர் தயாரிப்பாளர்களின் நச்சரிப்பால் ரொம்பவும் திணறி வருகிறாராம். அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்.
    மூணுஷா நடிகை தற்போது ஹீரோக்களுடன் நடிக்கமாட்டேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து, அதுபோன்ற கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடித்த ஒரு படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தபோதும் தொடர்ந்து தனது முடிவில் விடாபிடியாகவே இருக்கிறாராம் அந்த நடிகை.

    இந்த நடிகைக்கு தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால் அங்கேயும் நடிகையின் இந்த கொள்கை பரவ, தினமும் மூன்று மொழிகளிலும் சேர்த்து குறைந்தது 10 தயாரிப்பாளர்களாவது நடிகையிடம் போன் போட்டு என்னிடம் நீங்கள் நினைக்கிற மாதிரி ஒரு கதை இருக்கிறது, கேளுங்கள் என்று நச்சரித்து வருகிறார்களாம்.



    அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் நடிகையும் ரொம்பவுமே திணறி வருகிறாராம். இருப்பினும், போன் பண்ணும் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு பதிலை சொல்லி கட் பண்ணி விடுகிறாராம் நடிகை. தயாரிப்பாளர்களின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பதால், இனிமேல், கதை கேட்பதற்கு தனியாக ஒருவரை நியமிக்க நடிகை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
    முன்னணி நடிகர் ஒருவர் இயக்குனர் ஒருவரின் பிடிவாதத்தால் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    மூன்றெழுத்து இயக்குனர் தளபதி நடிகரை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தளபதி நடிகரை வைத்து இரண்டாவது படம் பண்ணும் அளவுக்கு தன்னுடைய இமேஜ் உயர்ந்துவிட்டதாக நினைத்துவிட்ட அந்த இயக்குனரும், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார். இதனால், தயாரிப்பாளர் தரப்பு தளபதியிடம் முறையிட, அப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார் அந்த நடிகர்.

    ஆனால், தற்போது மீண்டும் அந்த மூன்றெழுத்து இயக்குனர் ரொம்பவும் பிடிவாதமாக ஒரு செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்த முன்னணி நடிகரை ரொம்பவும் அப்செட்டாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், மூன்றெழுத்து இயக்குனரின் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்குவதற்கு ஒட்டுமொத்த குழுவும் ராஜஸ்தான் போயிருக்கிறதாம்.



    சென்னையிலேயே இவ்வளவு வெயில் வாட்டியெடுக்கும்போது, பாலைவனமான ராஜஸ்தானில் குளிரவா செய்யும். அங்கு இதைவிட அதிகமான வெயில் வாட்டியெடுத்திருக்கிறது. இதையெல்லாம் கண்ட படக்குழு கொஞ்சம் பதறிப்போக, இங்கிருந்து வேறு எங்காவது சென்று பாடலை படமாக்கலாம் என்று மூன்றெழுத்து இயக்குனரிடம் யோசனை கூறியுள்ளார்.

    ஆனால், இயக்குனரோ, எவ்வளவு வெயில் இருந்தாலும் இங்குதான் பாடல் காட்சியை படமாக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளதாம். இது தளபதி நடிகரையும் ரொம்பவும் அப்செட்டாக்கியுள்ளதாம். 
    நட்சத்திர ஜோடிகள் விரைவில் திருமணத்தில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    எங்கேயும் எப்போதும் காதலித்துக் கொண்டிருந்த நட்சத்திர ஜோடிகளை பலூன் மீண்டும் இணைத்துள்ளது. அந்த நட்சத்திர ஜோடிகளுக்குள் இருந்த சிறு காதல், இந்த பலூன் மூலம் மேலும் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தற்போது ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

    அவர்கள் யாரென்றால், சித்தியுடனான பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியே வந்த நாயகியும் வலியவனான நாயகரும்தான். இரண்டு பேரும் ஏற்கனெவே ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது, இவர்களுக்குள் காதல் என்று ஒரு பேச்சு அடிபட்டது. அப்போதைக்கு இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை என்று சொல்லிக்கொண்டாலும், எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டு வந்ததாக கூறப்பட்டது.



    இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இருவரும் வீட்டில் ஒன்றாக தோசை சுட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாதிரியான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இவர்கள் மறுபடியும் காதலர்களாகிவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. முன்பு, தங்கள் காதலர்கள் என்ற செய்தியை மறுத்தவர்கள், தற்போது கூறப்படும் செய்தி குறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள்.

    எனவே, இவர்களுக்குள் காதல் இருக்கிறது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்குள் இவர்கள் இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது. இந்த வருடத்திற்குள் இவர்கள் இரண்டு பேருககும் திருமண நடந்துவிடும் என்றும் கூறுகின்றனர். இதற்கு, இருவரும் கூடிய விரைவில் பதில் சொல்வார்கள் என திரையுலகமே காத்திருக்கிறது. 
    தொடர் பிரச்சனைகளால் பட்டதாரி நடிகர் ஆன்மீகம் பக்கம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகராக அறிமுகமாகி, பின்னர் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்து வந்த  பட்டதாரி நடிகர், தற்போது இயக்கத்தில் இறங்கி உள்ளார். அவரது இயக்கத்தில் முதல் படம் ஒன்று உருவாகி விரைவில்  ரிலீசாக உள்ளது. 

    சமீபத்தில் திரையுலக பிரபலங்களின் லீலைகளை பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்டு தமிழ்சினிமாவையே கதிகலங்க  வைத்தார். அதில் பட்டதாரி நடிகரின் படங்களும் வெளியாகி தீயாக பரவி வந்தது. அதனால் அவரது குடும்பத்தில் இவரை  பயங்கரமாக திட்டவிட, என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறாராம்.



    அதற்கு முன்பே பால் நடிகை, தனது கணவரை பிரிய இவரே காரணம் என்று கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, நடிகரை  தங்களது மகன் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது. தொடர்ந்து தன்னை வாட்டிவதைக்கும் இந்த  பிரச்சனைகளில் இருந்து மீள என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நடிகருக்கு தற்போது அவரது குடும்ப  ஜோசியர் ஒருவர் மூலமாக புதிய யோசனை ஒன்று முளைத்துள்ளதாம்.

    அதாவது, நடிகரின் குடும்ப ஜோசியர் ஒருவர் அவரை ஆன்மீகத்தில் ஈடுபட அறிவுரை வழங்கி உள்ளாராம். ஜோசியரின் அறிவுரை நடிகருக்கும் பிடித்துப்போக விரைவில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறாராம். ஆன்மீகத்தில் ஈடுபடுவது இருக்கட்டும், அங்கேயாவது சர்ச்சையை கிளப்பாமல் இருப்பாரா? என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது. 
    தனது மேனேஜரால் தனது லீலைகள் எதுவும் வெளிவந்துவிடுமோ? என்ற பதட்டத்தில் ஒரு நடிகை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    சமீபத்தில் பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்ட திரையுலக பிரபலங்களின் லீலைகள் தமிழ்சினிமாவையே கதிகலங்க வைத்தது. தற்போது ஒரு நடிகை அவருடைய மேனேஜர் மூலமாக தன்னுடைய லீலைகள் வெளியாகிவிடுமோ என்ற பதட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவுக்கு பப்ளியான ஜுலியட் நடிகைதான் அவர். தன்னுடைய அம்மாவுடன் பிரச்சினையால் தான் நடிக்கும் படம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் மேனேஜரை நம்பி கொடுத்தார். எந்த நேரத்தில் தன்னுடைய மேனேஜரிடம் எல்லா பொறுப்புகளையும் கொடுத்தாரோ, நடிகைக்கு இதுவரை சொல்லிக்கொள்ளும்படியாக எந்த படமும் அமையவில்லை.



    இந்நிலையில், தன்னுடைய மேனேஜரை மாற்றிவிட நினைத்த நடிகைக்கு அதிர்ச்சியான ஒரு விஷயம் காதுக்கு வந்துள்ளதாம். அதாவது, அந்த மேனேஜர், பப்ளி நடிகை அவ்வப்போது விளையாடிய சிறு சிறு விளையாட்டுக்களை எல்லாம் வீடியோ எடுத்து வைத்திருக்கிறாராம். அந்த லீலைகளை தற்போது வெளியிடப் போகிறேன் என்று அந்த மேனேஜர் நடிகையை மிரட்டுகிறாராம். இதனால், நடிகை மிகவும் பதட்டத்தில் இருக்கிறாராம். 
    நடிகை ஒரு தனது பேராசையால் மார்க்கெட்டை இழந்துபோயுள்ளார். அந்த நடிகை யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    கண்மணி நாயகிக்கு சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் என்ற ரேஞ்சுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஏன் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை என்று விசாரிக்கையில் நடிகை அதிக சம்பளம் கேட்பதால்தான் அவருக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.

    ஆனால், உண்மையில் விசாரிக்கையில் அந்த நடிகைக்கு இயக்குனராக வேண்டும் என்று நீண்டநாள் ஆசை உள்ளதாம். இப்போதைக்கு எந்த படத்திலாவது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போது, இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக அந்த படத்தை விட்டு போகமுடியாது.



    அந்த நேரத்தில் தனது கனவும் பாழாய் போய்விடும் என்பதாலேயே, இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மட்டும் நடித்துவிட்டு போய்விடுகிறாராம். இப்படி நடிக்கும்போது, ஒருசில காட்சிகளுக்காக சில நாட்கள் மட்டும் ஒதுக்கினாலே போதுமானது. மற்ற நாட்களில் இயக்குனராவதற்கான முயற்சியில் இறங்கலாம் என்ற எண்ணத்துடன்தான் நடிகை இந்த மாதிரி வருகிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து வருகிறாராம்.

    ஆனால், இதுவரைக்கும் நடிகைக்கு யாரும் இயக்குனர் வாய்ப்பை வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது. இயக்குனர் ஆசையால் நடிக்க வரும் வாய்ப்பையும் இழந்து, ஒருகட்டத்தில் நடிகை சினிமாவை விட்டே ஓடிப் போகப்போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

    நடிகை ஒருவர் பிரபலமான நடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    விஷாலமான நடிகரும் வாரிசு நடிகையும் ஆரம்ப காலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். ஏழு வருடங்களாக காதலித்தவர்கள் ஒருகட்டத்தில் பிரிந்து போயினர். காதலியை பிரிந்ததால் சோகத்தில் ஆழ்ந்தியிருப்பார் என்று நினைக்கையில், அடுத்ததாக வேறொரு நடிகையுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அந்த நடிகர்.

    டார்லிங்கான அந்த நடிகையுடன்தான் தற்போது அந்த நடிகர் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாராம். இத்தனைக்கும் அந்த நடிகை விஷாலமானவருடன் ஒருபடம்கூட நடித்தது கிடையாது. அப்படியிருக்கையில் இவர்களுக்குள் எப்படி இந்த நெருக்கம் ஏற்பட்டது என்று யோசிக்கையில், விஷாலமானவரின் நண்பர் மூலமாகத்தான் அந்த நடிகையின் அறிமுகம் நடிகருக்கு கிடைத்தாக கூறப்படுகிறது.



    அந்த நண்பரும் ஒரு நடிகர்தானாம். டார்லிங் நடிகை அந்த நடிகரோடு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகையை தனது நண்பனுக்கு அறிமுகம் செய்துவைக்க, அதன்பிறகு நடிகையுடன் பேசி நெருக்கமாகி தற்போது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாராம். தற்போது விஷாலமானவரும், அந்த நடிகையும் இரவு நேரங்களில் அடிக்கடி ரவுண்ட்ஸ் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.
    வாரிசு நடிகை ஒருவர் தனது அப்பா மற்றும் அக்காவின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் சமீபத்தில் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.
    பாலிவுட்டில் கொலவெறி நடிகருடன் அறிமுமாகி, தமிழிலும் தற்போது வீரமான நடிகரின் படத்தில் நடித்து வருகிறார். அந்த நடிகையின் அப்பா தமிழ் சினிமாவில் முன்னணி ‘நாயகன்’களில் ஒருவர். இந்த நடிகையின் அக்காவும் தற்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லாவற்றிலும் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

    ஆனால், அந்த நடிகையோ சமீபத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவம் அவரது பெயரை மட்டுமில்லாது, அவரது அப்பா மற்றும் அக்காவின் பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது என்னவென்றால், அந்த நடிகை நடித்து இதுவரை ஒரு இந்தி படம்தான் வெளிவந்துள்ளது. அதற்குள் முன்னணி நடிகைபோல் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு நேரம்தான் இருக்கமுடியும் என்று கண்டிஷன் போட்டுதான் கலந்துக்கிறாராம்.



    அப்படித்தான் சமீபத்தில் இவர் நடிச்ச இன்னொரு இந்தி படத்துக்கான புரோமோஷனுக்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும்னு சொல்லி அந்த நிகழ்ச்சியில கலந்திருக்கிறாரு. ஆனால், அவர் சொன்ன நேரத்தைவிட அந்த நிகழ்ச்சி நீண்டுகொண்டே போக, கடுப்பான நடிகை, உடனே அந்த படத்தின் மூத்த விநியோகஸ்தர் ஒருவரை பலபேர் முன்னிலையில் கடுமையாக திட்டிவிட்டு, பாதியிலேயே தனது அறைக்கு சென்றுவிட்டாராம்.

    பொது இடத்தில் நடிகை இப்படி கடுமையாக நடந்துகொண்டது அனைவருக்கும் அந்த நடிகையின் மீது அதிருப்தியை கொடுத்துள்ளதாம். அவருடைய அப்பாவுக்கு யார் மீதும் கோபமோ, பகையோ இருந்தாலும், அதை பொது இடத்தில் காட்டிக் கொள்ளமாட்டார். அப்படியிருக்கையில், அவருடைய வாரிசு இப்படி நடந்துகொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
    ×