என் மலர்
சினிமா

கிசுகிசு
ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா.... அதிர்ச்சியடைந்த படக்குழுவினர்
முன்னணி நடிகை ஒருவர், ஒரு படத்தில் குத்தாட்டம் போட அதிக சம்பளம் கேட்டிருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை, திருமணத்திற்குப் பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்பாடு போட்டு நடித்து வந்தாராம். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு பிறகு தற்போது பல படங்களில் கட்டளைகள் இல்லாமல் ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
அப்படி ஒரு படத்தில் குத்தாட்டம் போட ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த பாடல் கவர்ச்சியாக இருப்பதால் கதாநாயகி அளவிற்கு சம்பளம் கேட்டு இருக்கிறாராம். படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து, ஒருவழியாக கேட்ட பணத்தை கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம்.
Next Story






