என் மலர்
சினிமா

கிசுகிசு
சம்பள பிரச்சனையால் நடிகை எடுத்த அதிரடி முடிவு
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க சொன்னதால் படத்திலிருந்து அதிரடி முடிவு எடுத்து இருக்கிறாராம்.
வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.
இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நடிகையும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறினார்களாம். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். நடிகையின் இந்த அதிரடி பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்.
Next Story






