search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    நடிகையை ஓரம் கட்டும் இயக்குனர்கள்

    தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையின் ஆர்வத்தை இயக்குனர்கள் மறுத்து வருகிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி நடிகையாக பிசியாக இருந்த யோகா நடிகை, வரலாற்று படத்தின் 2 வது படத்துக்கு பிறகு தேர்ந்தெடுத்தே நடித்தாராம். உடல் எடையை குறைத்த பிறகு ஒரு படத்தில் மட்டும் நடித்தாராம்.

    இதனால் பல நடிகைகள் அவர் இடத்துக்கு போட்டியாக வந்துவிட்டார்களாம். இருந்தாலும் இழந்ததை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஆண்டு அதிக படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக நிறைய கதைகள் கேட்டுவருகிறாராம். 

    ஆனால், இயக்குனர்களோ நடிகைக்கு கதை சொல்ல மறுக்கிறார்களாம். நடிகைக்கு வயதாகிவிட்டது என்று ஓரம்கட்டுகிறார்களாம்.
    Next Story
    ×