என் மலர்
சினிமா செய்திகள்

மிஸ் பாண்டிச்சேரி சான் ரேச்சலின் தற்கொலை - பின்னணி என்ன?
- மாடலிங் உலகில் அவ்வப்போது துயர சம்பவங்கள் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கிறது.
- இவருடைய கருப்பு நிற சருமத்துக்காகவே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
மாடலிங் உலகில் அவ்வப்போது துயர சம்பவங்கள் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் மீண்டும் ஒரு துயர சம்பவம் நடைப்பெற்றுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மாடல் சான் ரேச்சல் ஆவார். இவர் மிஸ் புதுச்சேரி என்ற பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இவருடைய கருப்பு நிற சருமத்துக்காகவே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
25- வயது ஆகும் இவர் அதிகளவு இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
ரேச்சல் இதற்கு முன் மிஸ் பாண்டிச்சேரி {2020-2021}, மிஸ் டார்க் குவீன் தமிழ்நாடு 2019, மிஸ் வர்ல்ட் இன் பிளாக் ப்யூட்டி பிரிவில் மற்றும் ஏராளமான பேஷன் ஷோக்களிலும் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
காவல் அதிகாரிகளின் அறிக்கைப்படி ரேச்சல் 50 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். சம்பவம் நடந்த உடனே அவரை கடந்த ஜூன் 5 ஆம் தேதி பாண்டிச்சேரில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு தன்னுடைய கணவன் மற்றும் மாமியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுதியுள்ளார்.
இவருடைய இறப்பிற்கு பேஷன் ஷோக்கள் நடத்துவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் அதில் ஏற்பட்ட மன அழுத்த காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்கொலை அனைத்திற்கும் தீர்வல்ல, தற்கொலை செய்யும் எண்ணங்கள் தோன்றினால் இந்த எண்ணை தொடர்புக்கொள்ளவும் 9152987821






