என் மலர்
சினிமா செய்திகள்

உசுரே படத்தின் திரைவிமர்சனம்
- தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார்.
- ஆனால் ஜனனியின் அம்மா மிகவும் கோபக்கார பெண்மணியாக இருக்கிறார்.
கதைக்களம்
தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார். ஆனால் ஜனனியின் அம்மா மிகவும் கோபக்கார பெண்மணியாக இருக்கிறார். தன் மகலை யார் நிமிர்ந்து பார்த்தாலும் அவரை அடிக்கும் அலவிற்கு செல்கிறார். இப்படி இருக்கும் நிலையில் டீஜே ஜனனியை காதலிக்கிறார்.
முதலில் அவரது காதலை ஏற்க மறுக்கும் ஜனனி பிறகு அவரது காதலின் தீவிரத்தைப் பார்த்து அவரும் டீஜேவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா முட்டுக்கட்டை போடுவதோடு, டீஜேவிடம் இருந்து ஜனனியை பிரிப்பதற்காக திட்டம் போடுகிறார். மந்த்ராவின் திட்டத்தை மீறி ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
'அசுரன்' படத்தில் அதிரடி இளைஞராக கவனம் ஈர்த்த டீஜே, இதில் இளம் ஹீரோவாக காதல் நாயகனாக வளம் வருகிறார். பிக் பாஸ் பிரபலம் ஜனனி, இளமையாகவும், அழகாகவும், காதல் கதைக்கு பொருத்தமான நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.காமெடி நடிகராக அறியப்பட்ட கிரேன் மனோகர், அழுத்தமான அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என அனைத்து நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
இயக்கம்
ஒரு சாதாரண காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நவீன் டி கோபால். ஆனால் படத்தின் கடைசி 10 நிமிடங்கள் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் காட்சியை பார்பதற்காக முழு திரைப்படத்தை பார்ப்பது பார்வையாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்திகிறது. படத்தின் முதல் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
இசை
இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய், கிராமத்தின் அழகை எளிமையாகவும், இயல்பாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.
ரேட்டிங் ௨.5/5






