என் மலர்
சினிமா செய்திகள்
அட்டகாசமான கிரைம் திரில்லரான இந்திரா பட டிரெய்லர் வெளியீடு!
- வசந்த் ரவி அடுத்ததாக இந்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் வசந்த் ரவி ராக்கி மற்றும் ஜெயிலர் படங்களின் மூலம் மக்களின் மனதில் மிக ஆழமாக பதிந்தார். வசந்த் ரவி அடுத்ததாக இந்திரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் வசந்த் ரவி, போலீஸ் அதிகாரி, காதலன் மற்றும் பார்வையற்ற என கலவையான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லரில் அடையாளம் காண முடியாத தொடர் கொலைகாரனை பிடிக்க போலீசார் மேற்கொள்ளும் விசாரணையுடன் தொடங்குகிறது. கல்யாண் மாஸ்டர், இந்த விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரியாக நடிக்கிறார். அதே நேரத்தில், பார்வையற்ற வசந்த் ரவி, தனது நண்பரின் உதவியுடன் கொலைகாரனை தனிப்பட்ட முறையில் தேடுகிறார்.
மற்றொரு காட்சியில் அங்கு அவர் ஒரு போலீசராக மெஹ்ரீன் பிர்சாதாவுடன் காதலில் இருப்பது போல. சுனில், வில்லனாக தோன்றும் விதத்தில் சற்று வினோதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிகா சுரேந்திரனும் சிறப்பான காட்சிகளில் தோன்றுகிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகிறது.







