என் மலர்tooltip icon

    OTT

    இந்த வார ஓடிடி ரிலீஸ்
    X

    இந்த வார ஓடிடி ரிலீஸ்

    • சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரேசா நடிப்பில் வெளியானது கேங்கர்ஸ் திரைப்படம் .
    • இந்நிலையில் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. பல திரைப்படங்களுக்கு திரையரங்கிள் கிடைக்காத வெற்றி ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கிடைகிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    கேங்கர்ஸ்

    சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரேசா நடிப்பில் வெளியானது கேங்கர்ஸ் திரைப்படம் . பல வருடங்களுக்கு பிறகு இணைந்த இந்த கூட்டணி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    நேசிப்பாயா

    மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியானது நேசிப்பாயா திரைப்படம், இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்க அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்தார். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். இத்திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    மரணமாஸ்

    பசில் ஜோசப் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது மலையாள திரைப்படமான மரணமாஸ். அராத்தாக இருக்கும் கதாநாயகன் பசில் ஒரு தொடர்கொலை சந்தேக குற்றவாளியாக இருக்கிறார். இவர் ஒரு நாள் பேருந்தில் ஏறி செல்லும்போது அங்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.இப்படம் வரும் மே 15 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    அமெரிக்கன் மேன் ஹண்ட்: ஒசாமா பின் லேடன்

    மோர் லவ்ஷி மற்றும் டேனியல் சிவன்ஸ் மூன்று பாக ஆவண தொடராக உருவாக்கியுள்ளனர். ஒசாமா பின் லேடனை அமெரிக்க அரசு எப்படி பிடித்தது என்பதை கூறும் ஆவண தொடராக உருவாகியுள்ளது. இத்தொடர் வரும் மே 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    Next Story
    ×