போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..!- வெளியானது படையப்பா டிரெய்லர்

படையப்பா படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
போடா.. ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..!- வெளியானது படையப்பா டிரெய்லர்
Published on

கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

இதனை முன்னிட்டு படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 'படையப்பா' திரைப்படம் ரீ-ரிலீஸாகும் நிலையில் புதிய ட்ரெய்லரை இன்று மாலை 7 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com