என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `கேங்கர்ஸ் படத்தின்`என் வான்மதியே பாடல் ரிலீஸ்
    X

    `கேங்கர்ஸ்' படத்தின்`என் வான்மதியே' பாடல் ரிலீஸ்

    • சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
    • கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

    15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

    இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான குப்பன் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது.குப்பன் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தற்பொழுது படத்தின் செகண்ட் சிங்கிளான `என் வான்மதியே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை லவரதன் வரிகளில் மது ஸ்ரீ மற்றும் அஷ்வத் அஜித் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் மெலடியாக உருவாகியுள்ளது.

    Next Story
    ×