`படையாண்ட மாவீரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
`படையாண்ட மாவீரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.

மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com