என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தி பெட்- திரைவிமர்சனம்
    X

    தி பெட்- திரைவிமர்சனம்

    தாஜ்னுர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    நாயகன் ஸ்ரீகாந்த் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், நண்பர்களான பிளாக்பாண்டி, வி.ஜே.பப்பு, விக்ரம் ஆகியோருடன் வார விடுமுறையை கொண்டாட நினைக்கிறார். நண்பர்கள் மற்றும் போதாது என்று 'கால் கேர்ள்' ஆன சிருஷ்டி டாங்கேவையும் ஊட்டிக்கு அழைத்து செல்கின்றார்.

    ஊட்டி ரிசார்ட்டில் 5 பேரும் தங்கி இருக்கும்போது 'கால்கேர்ள்' சிருஷ்டி டாங்கே காணாமல் போகிறார். இதைத் தொடர்ந்து நண்பரான விக்ரமும் காணாமல் போகிறார். இதை விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரியான ஜான்விஜய் களத்தில் இறங்குகிறார்.

    இறுதியில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, நண்பர் விக்ரம் ஆகியோரை கண்டுபிடித்தார்? காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு சில இடங்களில் மட்டுமே நடிக்க செய்து இருக்கிறார். சிருஷ்டி டாங்கே மீது காதல் கொள்வது, காணாமல் போன சிருஷ்டி டாங்கேவை தேடி அலைவது என ஆங்காங்கே நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக போலீஸ் விசாரணையில் சித்ரவதைக்குள்ளாகும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    கதாநாயகியான சிருஷ்டி டாங்கே 'கால்கேர்ள்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குடும்பப்பாங்கான கேரக்டரில் பார்த்த சிருஷ்டி டாங்கே இந்த படத்தில் கவர்ச்சியும், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் மது அருந்துவது என காட்சிகளில் வியக்க வைத்துள்ளார்.

    பிளாக் பாண்டி, வி.ஜே.பப்பு மற்றும் நண்பர்களின் காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. போலீஸ் அதிகாரியான ஜான்விஜய் நடிப்பு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்துவரும் ஜான் விஜய் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

    இயக்கம்

    நண்பர்களின் காமத்தால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணி பாரதி. விழிப்புணர்வு படமாக கொடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் வலுவான காட்சிகளும் சுவாரஸ்யமான காட்சிகளும் இல்லாமல் சாதாரண படமாக மாறிவிட்டது. அதிக லாஜிக் மிரல்களை தவிர்த்து இருக்கலாம்.

    இசை

    தாஜ்னுர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

    ஒளிப்பதிவு

    கோகுல் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ரேட்டிங்: 2/5

    Next Story
    ×