என் மலர்
சினிமா செய்திகள்

தடை அதை உதை- திரை விமர்சனம்
சினிமாவில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் எப்படியாவது படம் எடுத்திட வேண்டும் என்கிற லட்சியப் பயணத்தில் இருக்கிறார்கள்.
கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து தனது அடுத்த தலைமுறையை மீட்டெடுக்க போராடும் நபர், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்ற உண்மை சம்பவத்தை இளைஞர்கள் குறும்படமாக எடுக்கின்றனர்.
இந்த குறும்படம் மூலம் தங்களுக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால், படம் தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. இதனால், தங்களது கனவு சிதைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.
அப்போது சோகத்தில் இருக்கும் நண்பர்கள் மூன்று பேரும் ஒருவரிடம் காரில் லிப்ட் கேட்டு செல்கின்றனர். அந்த கார் ஓட்டுனரிடம் குறும்படத்தின் கதையை சொல்கின்றனர்.
முதல் பாதி இப்படி இருக்க.. இரண்டாம் பாதியில் மற்றொரு கதை வருகிறது. முதல் கதையில் வந்த கதாப்பாத்திரங்கள் வேறு மாதிரி சித்தரிக்கப்படுகின்றன. இதில், அங்காடி தெரு மகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமூக வலைத்தளத்தின் மோகத்தால் மகேஷின் சகோதரி தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த தற்கொலை சம்பவத்திற்கும் முதல் பாதியின் கதைக்கும் இணையும் இடத்தில் சில திருப்பங்கள் நடக்கின்றன.
இறுதியில், இளைஞர்கள் சினிமாவில் சாதித்தார்களா? பெண்ணின் தற்கொலைக்கு யார் காரணம்? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
அங்காடித்தெரு மகேஷ் நடிப்பு கவனிக்க வைக்கிறது. குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது உள்ளிட்டோரும் கொடுத்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்கம்
இயக்குனர் அறிவழகன் முருகேசன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கதையை பல்வேறு கோணங்களில் நகர்த்தி, கதாப்பாத்திரங்களை இன்னும் சரியான முறையில் கையாண்டிருக்கலாம்.
இசை
சாய் சுந்தரின் இசையில் பாடல்கள், பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு
படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நாடகத்தன்மை.






