என் மலர்
சினிமா செய்திகள்

உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள்: விஜய் பேச்சு.. லைவ் அப்டேட்ஸ்
- நடிகர் விஜய் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்குகிறார்.
- இதற்கான ஏற்பாடு நீலாங்கரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.
இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.
விஜய்க்கு பரிசளித்த மாற்றுத் திறனாளி மாணவன்
இந்த நிகழ்ச்சிக்காக தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றார். இவருடன் ரசிகர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர்.பின் அவர் நீலாங்கரை தனியார் அரங்கத்திற்கு சென்றார். அங்கு விஜய்க்கு மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் பரிசு வழங்கினார்.
இதையடுத்து மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசி வருகிறார்.
Live Updates
- 17 Jun 2023 11:34 AM IST
படிப்பை மட்டும் உங்களிடம் எடுக்க முடியாது. பள்ளி, கல்லூரி படிப்பு மட்டும் முழுமையான கல்வி கிடையாது.
- 17 Jun 2023 11:33 AM IST
சமூக வலை தளங்களில் பரவும் பல தகவல்கள் போலியானவை. கவர்ச்சிக்கரமான பதிவுகள் மூலம் நம்மை ஈர்க்க முயற்சிப்பார்கள்.
- 17 Jun 2023 11:32 AM IST
பெற்றோர் இல்லாத புதிய சூழலில் உங்களது பண்பு நலன்களை கடைபிடிக்க வேண்டும். படிப்பை விட ஒழுக்கம் முக்கியமானது.






