search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெளியாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் டிரைலர்.. அப்டேட் கொடுத்த படக்குழு..
    X

    விஜய் தேவரகொண்டா

    வெளியாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் டிரைலர்.. அப்டேட் கொடுத்த படக்குழு..

    • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.
    • லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

    மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    லைகர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, லைகர் படத்தின் டிரைலர் 21-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×