என் மலர்

  சினிமா செய்திகள்

  கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ரஜினி நடிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து
  X

  ரஜினிகாந்த்

  கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ரஜினி நடிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து.
  • கவிஞர் வைரமுத்து இதுவரை 7500 பாடல்கள் எழுதியுள்ளார்.

  தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

  இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழுமுறை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.


  வைரமுத்து

  கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புத்தகம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்நிலையில், கள்ளிக்காட்டு இதிகாசம் திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதில் பேயத்தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று வைரமுத்து கூறியுள்ளார். மேலும் அதில் அவருக்கு எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்பாராத பல விருதுகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

  Next Story
  ×