என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
விக்ரம் படத்தில் சூர்யாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புகளிடையே திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், கமலின் 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஐந்து நிமிடங்களே வரும் காட்சியில் நடிப்பதற்காக ஒரு நாள் செலவழித்த சூர்யா எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.