என் மலர்
சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு சர்பிரைஸ் - வேட்டையன் ரிலீஸ் அப்டேட் வெளியீடு
- வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
- இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் "வேட்டையன்" படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது.
அந்த வகையில், இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story






