என் மலர்
சினிமா செய்திகள்

இளையராஜாவுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டி வருகிறார். இவருக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது பிறந்தநாள் விழா இன்று இளையராஜாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மூத்த அமைச்சர் கே.என்.நேரு உடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!
— M.K.Stalin (@mkstalin) June 2, 2023
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார்.… pic.twitter.com/Os1dE1UJKH






