என் மலர்
சினிமா செய்திகள்

மார்க் ஆண்டனி
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'மார்க் ஆண்டனி' திரைப்படம்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..
- நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மார்க் ஆண்டனி படக்குழு
இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
மார்க் ஆண்டனி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Mark Antony ????? pic.twitter.com/SwzvvcFciG
— S J Suryah (@iam_SJSuryah) January 26, 2023






