என் மலர்

  சினிமா செய்திகள்

  எங்களை மன்னித்து விடுங்கள் - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
  X

  கார்த்திக் சுப்பராஜ்

  எங்களை மன்னித்து விடுங்கள் - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
  • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

  இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

  ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

  இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "வாவ்...மிகவும் அருமை. முழு மனதுடன் இப்படத்தை எடுத்ததற்காக நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவினருக்கு ஹாட்ஸ் ஆஃப். இப்படம் அனைத்து உண்மையான தேசபக்தர்களுக்கும் சமர்ப்பணம். சிம்ரன் அவர்கள் சூப்பர் மற்றும் நம்பி நாராயணன் அவர்களுக்கு பெரிய சல்யூட். இப்படத்தில் சூர்யா சார் கடைசியில் சொல்வது போல் எங்களை மன்னித்துவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள மாதவன், கார்த்தி சுப்பராஜிற்கு நன்றி கூறியுள்ளார்.  Next Story
  ×