இதை என்னால் நம்பமுடியவில்லை.. குஷ்பு நெகிழ்ச்சி

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'அண்ணாமலை'.இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு joமுதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார்.
குஷ்பு
குஷ்பு
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி வெளியான திரைப்படம் 'அண்ணாமலை'. இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். சரத் பாபு, மனோரம்மா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடப்படும் படங்களில் 'அண்ணாமலை' திரைப்படம் இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை

'அண்ணாமலை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்திருந்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த குஷ்பூ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அண்ணாமலை, என் கேரியரில் மிக சிறந்த படங்களில் ஒன்று, 30 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. ரஜினிகாந்த் சாரிடம் பணிபுரிந்தது மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன். மேலும், சுரேஷ்கிருஷ்ணா சாருக்கும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சாருக்கும் நான் கண்டிப்பாக கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com