என் மலர்

  சினிமா செய்திகள்

  கலகத் தலைவன் ஆன உதயநிதி.. வைரலாகும் வீடியோ..
  X

  உதயநிதி ஸ்டாலின்

  'கலகத் தலைவன்' ஆன உதயநிதி.. வைரலாகும் வீடியோ..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கிறார்.
  • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

  இதில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


  கலகத் தலைவன்

  இதையடுத்து, தடம், மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.

  இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கலகத் தலைவன்' என படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

  Next Story
  ×