என் மலர்

    சினிமா செய்திகள்

    ஷங்கருடன் இணைந்த மூன்று முன்னணி இயக்குனர்கள்?
    X

    ஷங்கர்

    ஷங்கருடன் இணைந்த மூன்று முன்னணி இயக்குனர்கள்?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்தியன் 2

    இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    'இந்தியன் 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 3-வது வாரத்தில் நடைபெறும் என்று சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருந்தார். மேலும், 'இந்தியன் 2' மற்றும் 'ஆர்.சி. 15' படத்தின் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.


    ஷங்கர் - கமல்ஹாசன்

    இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தில் மூன்று இயக்குனர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்தபாலன், சிம்பு தேவன், அறிவழகன் ஆகியோர் இந்த படம் முழுவதும் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×