search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தளபதி 67 தவிர எதுனாலும் கேளுங்க - இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
    X

    லோகேஷ் கனகராஜ்

    தளபதி 67 தவிர எதுனாலும் கேளுங்க - இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

    • தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.
    • இவர் விஜய்யின் 67-வது படத்தை இயக்கவுள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்கவுள்ளார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் தளபதி 67 படத்தை தவிர எதுனாலும் கேளுங்கள், தளபதி 67 படத்தின் அறிவிப்பு தாமதமாக வெளியாகும் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×