என் மலர்

  சினிமா செய்திகள்

  எனக்கு மூளை இல்லை - நடிகர் ஆர்யா பரபரப்பு பேட்டி
  X

  ஆர்யா

  எனக்கு மூளை இல்லை - நடிகர் ஆர்யா பரபரப்பு பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
  • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


  கேப்டன்

  இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 'கேப்டன்' திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. "கேப்டன்" திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  கேப்டன்

  இதையடுத்து இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஆர்யாவிடம் பத்திரிகையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், " அரசியலில் வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லை" என்று கூறியுள்ளார்.

  Next Story
  ×