என் மலர்

  சினிமா செய்திகள்

  படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்
  X

  ஐஸ்வர்யா ராஜேஷ்

  படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
  • 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

  'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

  ஐஸ்வர்யா ராஜேஷ்

  கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருந்தது.

  டிரைவர் ஜமுனா படக்குழு

  சில தினங்களுக்கு முன்பு 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


  Next Story
  ×