என் மலர்

  சினிமா செய்திகள்

  விட்டுக்கொடுக்காத அந்த மனசு தான் யோகிபாபு.. பிரபல நடிகர் பாராட்டு
  X

  யோகிபாபு

  விட்டுக்கொடுக்காத அந்த மனசு தான் யோகிபாபு.. பிரபல நடிகர் பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களில் யோகிபாபு நடித்துள்ளார்.
  • சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான பன்னி குட்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகிபாபு. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கும் இவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதற்கிடையில் ஏராளமான படங்கள் இவரின் கைவசம் உள்ளது.


  யோகிபாபு சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்டருடன் பகிர்ந்திருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், இந்த படத்தில் நண்பர் நிதின்சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். உடன் நடிக்கும் நடிகர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு யோகிபாபு பகிர்ந்திருக்கும் இந்த பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று பேசும்பொருளாகி உள்ளது.


  இந்நிலையில் இதனை குறிப்பிட்டு நடிகர் நிதின் சத்யாவின் பதிவு வைராலாகி வருகிறது. அதில், ஒரு நண்பனை விட்டுகுடுக்காம ரசிகர்களையும் விட்டுகுடுக்காம அந்த மனசு தான் யோகிபாபு என்று பதிவிட்டுள்ளார்.


  Next Story
  ×