என் மலர்
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி - மாளவிகா மோகனன்
விஜய் சேதுபதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை
- விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
- இவரின் பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மாளவிகா மோகனன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
மாளவிகா மோகனன்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி அவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
மாளவிகா மோகனன் - விஜய் சேதுபதி
அதில், என் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக உருவாக்கி என்னை மிகவும் நேசிக்கவும் சிறப்பாகவும் மாற்றிய அனைவருக்கும் அன்பு மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மாளவிகா மோகனன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
It was a happy birthday ♥️
— malavika mohanan (@MalavikaM_) August 6, 2022
Only love to everyone who made it so special and made me feel so loved and special🥰 ✨ pic.twitter.com/ttRGh71G8q






