என் மலர்
சினிமா செய்திகள்

விஜய்
மாணவர்களை நேரில் சந்திக்கும் விஜய்.. இது தான் காரணமா?
- நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
- இவர் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ - மாணவியருக்கு விஜய் உதவித் தொகைகளை வழங்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.