என் மலர்
சினிமா செய்திகள்

நிறைய கோப்பைகளும், பந்தயங்களும் ஜெயிக்கணும் முதலாளி - சந்தானம் பதிவு
- உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.
- இவருக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இன்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்" என்று தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் - சந்தானம்
இந்நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதிக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும், பந்தயங்களும், போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கணும். இந்தக் கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி உதயநிதி ஸ்டாலின்" என குறிப்பிட்டுள்ளார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினுடன், சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்!
— Santhanam (@iamsanthanam) December 14, 2022
இந்த கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி @Udhaystalin 😊






