என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆபாச காட்சிகள் ஓ.டி.டி. தளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
    X

    ஆபாச காட்சிகள் ஓ.டி.டி. தளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

    • ஓடிடியில் வாரந்தோறூம் திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது.
    • நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    வாரந்தோறும் திரையரங்குகளில் புதுபுது திரைப்படங்கள் வருவதுப் போல். ஓடிடியிலும் திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. ஓடிடி தற்பொழுது திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் அதனை பன்நாட்டு மக்களுக்கு கொண்டு செல்ல பெரும் பங்கை வகுக்கிறது.

    ஆனால் ஓடிடியில் பல ஆங்கில திரைப்படங்களில் காதல் காட்சிகள், நிர்வாண காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை ஓடிடி தளம் முன்னெச்சிரிக்கையுடன் இதில் இவ்வாறு ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என அறிவிப்புடன் தான் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது. ஆனால் ஓடிடி தளங்கள் ஆபாச காட்சிகளை பொருட் படுத்தாமல் தளங்களில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது என வழக்கு பதிவிட்டுள்ளனர்.

    ஓ.டி.டி. மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச காட்சிகளுடன், வெப் சீரியல்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நெட்பிளிக்ஸ், அமேசன் பிரைம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×