என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூரியின் மாமன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
    X

    சூரியின் "மாமன்" படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    • ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படம்.
    • இப்படம் மே 16ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன் படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

    இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி வருகிறது.

    இப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×