search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    LIK திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது - இயக்குனர் விக்னேஷ் சிவன்
    X

    LIK திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது - இயக்குனர் விக்னேஷ் சிவன்

    • விக்னேஷ் சிவன் தற்பொழுது லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    விக்னேஷ் சிவன் தற்பொழுது லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

    இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் பாடலான தீமா தீமா மபாடல் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.

    இந்நிலையில் விக்னேஷ் சிவன் கலந்துகொண்ட நேர்க்காணலில் ஒன்றில் படத்தை குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் அதில் "இப்படம் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. படத்தின் பட்ஜெட் அதிகாமக இருப்பதால் லைகா நிறுவனம் இப்படத்தை கைவிட்டது. திரைப்படத்தை நிகழ் காலத்தில் நடக்க கூடியவையாக கதைக்களத்தை மாற்ற சொன்னார்கள். இப்படத்தின் கதையை அப்படி மாற்ற முடியாது. பாகுபலி திரைப்படத்தை நிகழ் காலத்தில் நடக்கக் கூடிய கதைக்களமாக மாற்ற முடியுமா?" என நகைச்சுவையாக கூறீனார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×