என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாடகி ஜானகியின் ஒரே மகன் உயிரிழப்பு... திரையுலகினர் இரங்கல்!
    X

    பாடகி ஜானகியின் ஒரே மகன் உயிரிழப்பு... திரையுலகினர் இரங்கல்!

    • "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி.
    • முரளி கிருஷ்ணா ஒரு பிரபலமான பரதநாட்டிய கலைஞர்

    "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. இவரின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முரளி கிருஷ்ணாவுக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். பாடகி ஜானகியின் மகன் என்பதைத் தாண்டி, பிரபலமான பரதநாட்டிய கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சில படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்த செய்தியை பாடகி கே.எஸ். சித்ரா சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். முரளியின் திடீர் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், அன்பாக சகோதரரை இழந்துவிட்டதாகவும் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    "இன்று காலை எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் ஒரு அன்பான சகோதரனை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வலியையும் துக்கத்தையும் கடக்கும் வலிமையை அம்மாவுக்கு கடவுள் வழங்கட்டும். மறைந்த ஆன்மா நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி" என்று கே.எஸ். சித்ரா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




    Next Story
    ×