என் மலர்
சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு நடித்துள்ள "லவ் மேரேஜ்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படம்.
- அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் படம் 'லவ் மேரேஜ்'. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 27ஆம் படம் ரிலீஸ் ஆகும் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Next Story






