என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    30 ஆண்டுகள் நிறைவு... நாளை ரீ ரிலீசாகும் ரஜினியின் பாட்ஷா திரைப்படம்
    X

    30 ஆண்டுகள் நிறைவு... நாளை ரீ ரிலீசாகும் ரஜினியின் பாட்ஷா திரைப்படம்

    • 'பாட்ஷா' படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது
    • படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது.

    1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.

    சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் திரைக்கதையாக அமைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

    படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இன்றுவரை மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள், ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. மாணிக் பாஷா, மார்க் ஆண்டனி என இன்றும் டிரேட் மார்க் வசனமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், நாளை (ஜூலை 18ம் தேதி) அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×