என் மலர்
சினிமா செய்திகள்

அரசியல் கேள்வி கேட்காதீங்கனு சொல்லியிருக்கேன்.. ரஜினிகாந்த்
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார்.
- கூலி படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் "கூலி" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
இதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 13 ஆம் தேதி துவங்குவதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், என்னிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story






