என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மார்ச் மாதம் ரிலீசாகும் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங்... வெளியான அசத்தல் அப்டேட்..!
    X

    மார்ச் மாதம் ரிலீசாகும் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங்... வெளியான அசத்தல் அப்டேட்..!

    • உஸ்தாத் பகத் சிங் படத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ளது.
    • இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், `உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன், ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் இந்தப் படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    Next Story
    ×