கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார்இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

'மெய்யழகன்' படத்தைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன. முதலில் 'வா வாத்தியார்' படம் டிசம்பர் 5-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இப்படம் ரிலீசாவதில் திடீர் சிக்கல் எழுந்தது. அதாவது படத்தின் இறுதிகட்ட பணிகள் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யக்கோரி ஓ.டி.டி. உரிமம் பெற்ற நிறுவனமும் அழுத்தம் தருகிறதாம். இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com