என் மலர்
சினிமா செய்திகள்

`கிஸ்' பட தலைப்ப மிஷ்கின் சார் தான் கொடுத்தாரு - கவின்
- கவின் கிஸ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ்.
டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார்.
இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது . கிஸ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
கிஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான திருடி அனிருத் குரலில் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கவின் பேசியதாவது " இத்திரைப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த ரோம் காம் திரைப்படமாகும். அதனால் இப்படத்தில் நடிக்க எனக்குள் ஒரு ஆசை இருந்தது. அது மக்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். முதலில் கிஸ் படத்தின் டைட்டிலை மிஷ்கின் சார் தான் அதை ரெஜிஸ்டர் செய்து வைத்து இருந்தார். பின் இயக்குநர் சதீஷ் தான் சென்று மிஷ்கினிடம் கிஸ் தலைப்பை வாங்கி வந்தார். பயங்கர ஸ்வீட்டான ஒரு மனிதன் மிஷ்கின் சார்" என கூறியுள்ளார்.






