என் மலர்
சினிமா செய்திகள்

Mrs & Mr திரைவிமர்சனம்
- கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் வனிதா.
- ராஜபாண்டி பாங்காக்கை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
கதைக்களம்
வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பேங்காக்கில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ஆனால் வனிதா தன்னுடைய அழகு போய்விடும் என்பதற்காக குழந்தை இப்பொழுது பெற்றுக்கொள்ள வேண்டாம் என கண்டிஷன் போடுகிறார். இப்படியே 10 வருடங்கள் சென்றுவிடுகிறது.
இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் பின்னால் மிகவும் கடினமாகிவிடும் என முடிவெடுத்து வனிதா தாயாக விரும்புகிறார். ஆனால் இம்முறை குழந்தை வேண்டாம் என ராபர்ட் மறுக்கிறார். ஆனால் வனிதா விடாமல் பல ரொமான்ஸ் முயற்சிகளில் ஈடுப்படுகிறார். கடைசியில் இவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அம்மாவாகும் ஏக்கம், அதற்காக போடும் திட்டங்கள், நகைச்சுவை, நடனம் என அனைத்து காட்சிகளிலும் முடிந்தளவுக்கு உழைப்பை கொடுத்து நடித்துள்ளார்.
ராபர்ட் கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். நண்பர்களாக வரும் கணேஷ், ஆர்த்தி, நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளனர். அம்மாவாக நடித்து இருக்கும் ஷகிலா மற்றும் அவருடைய நண்பர்களாக வரும் பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி என பலரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
நாற்பது வயது பெண்ணின் குழந்தை பெறும் கனவு. கரு உருவாக ஏற்படும் சிக்கல். அதனால் கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் வனிதா. படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும். நகைச்சுவை காட்சிகள் வொர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ்.
ஒளிப்பதிவு
ராஜபாண்டி பாங்காக்கை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
இசை
ஸ்ரீகாந்த் தேவா இசை கேட்கும் ரகம். சிவராத்திரி பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் சிறப்பாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.






