என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மோகன்லால் நடித்த ஹிருதயப்பூர்வம் படத்திற்கு `யு சான்றிதழ்
    X

    மோகன்லால் நடித்த 'ஹிருதயப்பூர்வம்' படத்திற்கு `யு' சான்றிதழ்

    • சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
    • சங்கீதா, சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தில், மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

    மேலும், சங்கீதா, சித்திக் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அகில் சத்யன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது.

    சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் 1987 இல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'நாடோடிக்கட்டு' மலையாள சினிமாவில் இன்று வரை ஒரு கிளாசிக் படமாக உள்ள நிலையில் அவர்களின் கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

    'ஹிருதயப்பூர்வம்' திரைப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகிறது.

    Next Story
    ×