என் மலர்
சினிமா செய்திகள்

MEGA BLAST அறிவிப்பு: விஸ்வம்பரா பட அப்டேட் கொடுத்த சிரஞ்சீவி!
- தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி.
- சிரஞ்சீவின் 156-வது படமான விஸ்வம்பரா படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.
இதைத்தொடர்ந்து சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 'விஸ்வம்பரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இவருடன் திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கனாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீசன் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் அதை தொடர்ந்து படத்தை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் மெகா பிளாஸ்ட் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






