என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Mega 157:சிரஞ்சீவி படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    • அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்குகிறார்.
    • மெகா 157 திரைப்படத்தின் பூஜை விழா கடந்த மாதம் நடைப்பெற்றது.

    கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கினார். இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்குகிறார்.

    மெகா 157 திரைப்படத்தின் பூஜை விழா கடந்த மாதம் நடைப்பெற்றது. வித்தியாசமான முறையிலும், நகைச்சுவை கலந்து பூஜை விழாவின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் சிரஞ்சீவி பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு மன ஷங்கர வரபிரசாத் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.

    Next Story
    ×