என் மலர்
சினிமா செய்திகள்

மாண்புமிகு பறை- திரைவிமர்சனம்
பறை இசை கலைஞர்களான சிவகுமார், ஆர்யன் ஆகியோர் பாரம்பரிய பறை இசையை உலகறிய செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிராமத்தில் வாழும் சிறுவர்களுக்கும் பறை இசையை கற்றுக் கொடுக்கின்றனர்.
சிவகுமார் மற்றும் ஆர்யனின் நடவடிக்கைகளுக்கு கிராமத்தில் உள்ள ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க வேறு சமூக பெண்ணான காயத்ரி ரெமாவை சிவகுமார் காதலித்து திருமணம் செய்கிறார்.
இந்த நிலையில் அருகில் உள்ள கிராமத்துக்கு இருவரும் பறை இசை நிகழ்ச்சிக்கு செல்லும்போது ஆர்யன் உயிரிழக்கிறார். சில தினங்களில் சிவகுமாரும் கொலை செய்யப்படுகிறார். இருவரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் லியோ சிவகுமார் பறை இசை கலைஞர் கதாப்பாத்திரத்திற்கு கேரக்டருக்கு தகுந்தவாறு அவரது அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். மனைவி காயத்ரி ரெமாவுடன் ரொமான்ஸ் மற்றும் உயிர் நண்பன் ஆர்யன் உயிரிழந்ததும் கதறும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பு. குறிப்பிட்ட காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும்படி ஆர்யன் நடிப்பு அமைந்துள்ளது. இசை நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் அவர் கொலை செய்யப்படும் காட்சிகள் பரிதாபத்தை வரவழைக்கிறது.
கணவர் லியோ சிவகுமாருடன் ரொமான்ஸ் மட்டுமின்றி அவர் கொலை செய்யப்பட்டதும் இறுதி காட்சியில் ஆக்ரோசத்தில் காயத்ரி ரெமா விஸ்வரூபம் எடுப்பது மிரள வைக்கிறது. கஜராஜ், ரமா, சேரன் ராஜ், அசோக் ராஜா ஆகியோர் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
இயக்கம்
பாரம்பரிய பறை இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.விஜய் சுகுமார். ஆனால் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லாமல் விட்டிருக்கிறார். காட்சிகளில் தடுமாற்றத்தை கொஞ்சம் கவனித்திருந்தால் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு
தேவாவின் இசை மற்றும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங்-2/5






