என் மலர்
சினிமா செய்திகள்

மாய பிம்பம்- திரைவிமர்சனம்
படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே கடலூர் சிறைச்சாலையில் கைதியாக மருத்துவ கல்லூரி மாணவன் ஜீவா (ஆகாஷ்) அறிமுகமாகிறார். பின்னர், சிறையில் ஏற்படும் இன்னல்களுக்கு நடுவே சிறை மருத்துவர் அவரை காப்பாற்றுகிறார்.
பின்னர், 2005ம் ஆண்டு பிளாஷ்பேக் தொடங்குகிறது. ஜீவா தாய், தந்தை, அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மருத்துவம் படிக்கும் ஜீவா, விடுமுறை நாட்களில் அவனின் நண்பர்களுடன் பொழுதை கழிப்பதே வாடிக்கை.
ஆனால், ஜீவாவின் நண்பர்களில் ஒருவனான மோகன் பெண்கள் குறித்தும் அவர்களை எப்படி ஏமாற்றி தங்களின் வலைக்குள் விழ வைப்பது போன்ற சிந்தனையில் இருப்பவன்.
இந்நிலையில், ஜீவா பேருந்து பயணத்தின்போது சுமதியை (ஜானகி) எதிர்ச்சியாக சந்திக்கிறார். ஜீவாவிற்கு சுமதியை பிடித்துப்போகவே, அவரை பின்தொடர்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட, ஜீவா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு சுமதி நர்ஸாக பணிபுரிய, ஜீவாவிற்கு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு நாள், நண்பன் மோகனின் பேச்சை கேட்டு சுமதியை தனது அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறார் ஜீவா. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி அங்கிருந்து அழுதுக்கொண்டே வெளியேற, தான் செய்தது தவறு என்று உணர்ந்த ஜீவா உடனே சுமதியை தேடிச் செல்கிறார்.
ஆனால், சுமதி வேலையைவிட்டு நின்றுவிட்டதாக தகவல் தெரியவே, ஜீவா சுமதியை தேதி அலைகிறார்.
இறுதியில், ஜீவா சுமதியை கண்டுபிடித்தாரா? ஜீவா சிறைக்கு செல்ல என்ன காரணம் என்பது படத்தின் மீதி கதை..
நடிகர்கள்
நாயகன் ஆகாஷ் பிரபு மருத்துவ மாணவன் ஜீவாவாக நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். சிறைவாசம் காட்சிகளில் அழுத்தத்துடன் உணர்ச்சி பொங்க நடித்துள்ளார். காதலி சுமதியாக ஜானகி எளிமையான மற்றும் தத்ரூபமான நடிப்பில் கண் கலங்க செய்து விடுகிறார்.
இயக்கம்
நடுத்தர குடும்பத்தில் நடக்கும் காதல் கதையை 2005ஆம் ஆண்டிற்கேற்ற காட்சிகளுடன் திரைக்கதையமைத்து எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஜே.சுரேந்தர். முதல் பாதியில் சிறையில் இருக்கும் இளைஞனின் நினைவலைகளில் தொடங்கும் படம் குடும்பம், நட்பு, காதல் என்ற கலகலப்புடன் செல்ல, இரண்டாம் பாதி நண்பர்களின் மேலோட்டமான கண்ணோட்டங்கள், காமம் மற்றும் காதலை வேறுபடுத்தி காட்டி உணர்வுகளின் வெளிப்பாட்டை அழுத்தமான காட்சிகளுடன் மனதை தொடும் அளவிற்கு கொடுத்து தடம் பதித்துள்ளார் இயக்குனர் கே.ஜே.சுரேந்தர்.
இசை
இசையமைப்பாளர் நந்தாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எட்வினின் ஒளிப்பதிவு அருமை.
ரேட்டிங்- 2.5/5






