என் மலர்
சினிமா செய்திகள்

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் லக்கி பாஸ்கர் இயக்குனர்?
- துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார்.
- வெங்கி அட்லூரி நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் வெங்கி அட்லூரி. சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.
இதை தொடர்ந்து வெங்கி அட்லூரி நடிகர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். தனுஷ் நடிப்பில் ஹானஸ்ட் ராஜ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் தயாரிக்க படப்பிடிப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளது. இப்படம் ஒரு ஆட்டோ மொபைல் இஞ்சினை கண்டுபிடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சூர்யா தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார் . திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






